ஒன்றிணைந்த எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

எந்த ஒரு அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கப்போவதில்லை என ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளதுடன், தங்களுடைய ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு வழங்குவதாக கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் கலந்துரையாடலில் உடன்பாடு எட்டப்பட்டதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]