ஒன்றிணைந்த எதிரணிக்குள் பெரும் சர்ச்சை

ஒன்றிணைந்த எதிரணிக்குள் பெரும் சர்ச்சை

ஒன்றிணைந்த எதிரணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவு செய்வதில் குழப்ப நிலை காணப்படுவதை தொடர்ந்து இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிறிகொத்தவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சி சாதாரண உறுப்பினரைக் கூட ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தயாராகவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வேட்பாளராக வருவதே அக்குழுவில் பெரும் பிரச்சினைக்குரியதாகவுள்ளது. எனினும் குடும்ப ஆட்சியினை உருவாக்குவது தமது நோக்கமல்ல’ என அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]