ஒன்றரை மாதக் குழந்தை பலி

சிலாபம், உதாகல பகுதியைச் சேர்ந்த ஒன்றரை மாதக் குழந்தை டெங்கு தொற்று நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாயும் டெங்கு தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்று வருவதுடன் அவரின் நிலமையும் கவலைக்கிடமாக இருப்பதாக சிலாப மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.