ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில் 1800 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து எண்ணூறு கிலோ 1800 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்

எனினும் தற்போது இந்தநிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவினருடனான கலந்துரையாடில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்-குரல்-

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களின் உதவியுடன் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கும் பொலிசாருக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் பிராந்திய பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது

வட பிராந்திய சிவில் பாதுகாப்பு குழுவிற்கான சிரேஸ்ர அத்தியட்சகர் கணேசநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள அண்மைக்காலமாக எதிர்கொண்டுவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது

சட்டவிரோத மண்கடத்தல் மற்றும் அதீத போதைப்பொருள் பாவனை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் அதிகமான முறைப்பாடுகள் இதன்போது பொலிசாரின் கவனத்திற்கு காண்டுவரப்பட்டது

இது தொடர்பில் சகலவித நடவடிக்கைகளும் வரும்நாட்களில் முன்னெடுக்கப்படும் என வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்

இதேவேளை வடமாகாணத்தில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்த வட மாகாண பிதி பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னாண்டோ இவ்விடயத்தில் பொலிசார் மிகவும் கவனமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]