ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவுதினம் இன்று யாழில் அனுசரிக்கப்பட்டது!!

இறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்கென தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக இந்நிகழ்வு யாழ் பலாலி படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது

இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்க தலைவி அனேமா பொன்சேகா மற்றும் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்கூரே ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

இதன்போது இரணுவ நினைவுத்தூபிக்கு முப்படையினரினால் பரட் மரியாதை செலுத்தப்பட்டதுடன் பிரதம அதிதிகளினால் நினைவுத்தூபியில் மலர்ச்செண்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது

அத்துடன் சர்மத வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றதுடன் முப்படை வீரர்கள் நினைவாக நூல் மற்றும் கொடி என்பனவும் வெளியிடப்பட்டது

யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்தினாதன் யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன் சர்வமத தலைவர்கள் யாழ் மன்னார் வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]