ஒக்டோபர் முதலாம் திகதி முதல் காலி கோட்டைக்குள் வாகனங்கள் பிரவேசிக்க தடை

காலி கோட்டைக்குள்

 

 

 

 

 

 

 

உலக மரபுரிமைத் தளமான காலி கோட்டைக்குள், கனரக வாகனங்கள் பிரவேசிக்க, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாகத் தடைவிதிக்கப்படவுள்ளது என, காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் சன்ன தாஸ்வத்த தெரிவித்தார்.

கோட்டையைப் பாதுகாக்கும் நோக்கிலே, இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தடையுத்தரவின்படி, 3 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட வாகனங்களும், 5 தொன்களுக்கு அதிக எடையுள்ள வாகனங்களும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படவுள்ளது.