இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் போன் செய்து எனக்கு பிடித்த ஒரே நடிகை நீங்கள் தான், உங்களை நேரில் பார்க்கனும் என கூறி அப்ளிகேஷன் போட்டுள்ளார்.
இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா தனது 29-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்,

Anushka Sharma
இந்த பிறந்த நாளை கோலி கொண்டாடவில்லை என்றே தெரிகிறது. ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி மோசமான தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் கேப்டன் கோலி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இதனால் காதலியின் பிறந்த நாளையே கண்டுகொள்ளாத சோகத்தில் உள்ளார் கோலி.
இந்த சந்தர்ப்பத்தில் சைக்கிள் கேப்பில் உள்ளே நுழைவது போல, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் அனுஷ்காவின் பிறந்தநாளில் காலையிலேயே அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி அசத்தியிருக்கிறார்.
அத்தோடு விடவில்லையே ரஷித் கான், எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகை அனுஷ்கா தான். உங்களை நேரில் பார்க்கணும் என்றும் அவருக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார். அனுஷ்கா ஷர்மாவுக்கு வயது 29 ஆகும் ஆனால் ரஷித் கானுக்கு 18 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]