ஐ.பி.ல் தொடர் – மும்பையுடன் மோதுகின்றது சென்னை!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி இன்று மும்பையில் வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.

இன்று மாலை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இரண்டு வருட தடைக்கு பின்னர் களமிறங்கியுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளன.

இரண்டு அணிகளும் கடந்த சீசன்கிளிலும் மொத்தமாக 22 போட்டிகளில் மோதியுள்ளதுடன், அதில் 12 போட்டிகளில் மும்பை அணியும் 10 போட்டிகளில் சென்னை அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இதில் வான்கடே மைதானத்தில் மோதிய 7 போட்டிகளில் மும்பை அணி 5 போட்டிகளிலும், சென்னை அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அணி விபரங்களை பொருத்தவரையில் விரல் உபாதைக்குள்ளாகியுள்ள பெப் டுபிளசிஸ் இன்று சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

அத்துடன் மும்பை அணியின் பெட் கமின்சும் உபாதை காரணமாக இன்றைய போட்டியில் மும்பை அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம் (உத்ததேச அணி)

சென்னை சுப்பர் கிங்ஸ்

முரளி விஜய், செம் பில்லிங்ஸ், சுரேஷ் ரெய்னா, சேன் வொட்சன், கேதர் ஜாதவ், எம்.எஸ்.டோனி (தலைவர்), டவைன் பிராவோ, ரவீந்ர ஜடேஜா, ஹர்பஜன் சிங், சர்துல் தாகூர், மார்க்வூட்

மும்பை இந்தியன்ஸ்

எர்வின் லிவிஸ், இசான் கிசன், ரோஹித் சர்மா(தலைவர்), சூர்யகுமார் யாதவ், கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, மிச்சல் மெக்லானகன், முஷ்தபிசூர் ரஹ்மான், ஜஸ்பிரிட் பும்ரா, ராஹுல் சஹார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected].com