ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் – எத்தனை இலங்கை வீரர்கள்?

எதிர்வரும் வருடம் நடைப்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இந்த மாதம் 18 ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.

70 வீரர்களை மட்டுமே ஏலம் விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 50 இந்திய வீரர்களும் 20 வெளிநாட்டு வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐபிஎல் தொடரில் மொத்தமாக 232 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 1003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை வீரர்கள் 28 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோருக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு 2 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஐ.பி.எல் வீரர்களின் ஏலத்துக்கான அடிப்படை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 9 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை ஏல விற்பனையில் எந்த ஒரு இந்திய வீரரும் 2 கோடி இந்திய ரூபாய் என்ற அடிப்படை விலைப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பித்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]