ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்!

அடுத்த வருடம் நடைப்பெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏல பட்டியல் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்து.

இந்தமுறை பட்டியலில் 346 கிரிக்கட் வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 226 பேர் இந்தியர்கள்.

லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தீவ்ஸ் ஆகிய இலங்கை வீரர்களுடன், ப்ரண்டன் மெக்கலம், க்றிஸ் வோக்ஸ், கொலின் இங்ராம், ஷோன் மார்ஸ், கோரி அன்டர்சன், சாம் கரன் மற்றும் டி ஆர்சி ஆகியோர் 2 கோடி இந்திய ரூபாவிற்கு பட்டியல்படுத்தப்பட்டவர்களாவர்.

இந்தமுறை 9 ஆப்கானிஸ்தான் வீரர்களும் ஏலத்திற்கு உள்வாங்கப்பட்டிருப்பதுடன், அமெரிக்காவைச் சேர்ந்த கிரிக்கட் வீரர் ஒருவரும் உள்வாங்கப்பட்டுள்ளார்.  அத்துடன் இலங்கையைச் சேர்ந்த 7 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குசல் பெரேரா 75 லட்சம் இந்திய ரூபாவிற்கும், திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், தசுன் சானக்க மற்றும் இசுரு உதான ஆகியோர் 50 லட்சம் இந்திய ரூபாவிற்கும் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]