ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் பெங்களூரை சேர்ந்த ஒருவர் கைது

ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் பெங்களூரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் சன்ரைஸ் குஜராத் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டு ஆட்டங்கள் கடந்த 9ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம்

இந்த இரண்டு போட்டிகளிலும் சூதாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை பெங்களூரு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிர்மல்குமார் என்ற கர்நாடக மாநிலத்தை சேர்தவரே இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளவராவார்.

சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2 இலட்சம் பணம், செல்போன்கள் என்பவறையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பத்தை அடுத்து ஐ.பி.எல். போட்டிகள் இடம்பெறும் மாநிலங்களின் புறநகர் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]