ஐ.பி.எல் தொடரில் களமிறங்கும் இலங்கை இளம் வீரர்

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, சன்ரைசர்ஸ் அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வார்னருக்கு பதிலாக, இலங்கை அணியின் இளம் வீரர் குசால் பெரேராவை நியமிக்க அந்த அணி முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாட பி.சி.சி.ஐ தடை விதித்துள்ளது.

மேலும், டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், வார்னருக்கு பதிலாக இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசால் பெரேராவை அணியில் சேர்க்க சன்ரைசர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வார்னருக்கு பதிலாக குசால் பெரேராவை நியமிக்க அவரை அணுகினோம்.

வார்னரைப் போல அவரும் அபாயகரமான வீரர் ஆவார். எங்களது அணியின் ஆய்வாளர், குசால் பெரேரா கடந்த சில மாதங்களாக சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார்.

எனினும், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், பெரேரா எங்கள் அணியில் இணைந்து கொள்வார் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

27 வயதான பெரேரா, 34 டி20 போட்டிகளில் விளையாடி 10 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது Strike rate 137 என்பது குறிப்பிடத்தக்கது.

அணித்தலைவர் யார் என்பதும் கேள்விகுறியாகவே உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]