ஐ.பி.எல் சூதாட்டம்: 9பேர் கைது

ஐ.பி.எல். 11அவது சீசன் போட்டுகள் நேற்று முன்தினம் மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. காவல்துறையினரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத்தின் போன்கிர் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கோழி கடையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின்போது ஒரு காரும், ஐந்து மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த குழுவினர் மற்றவர்களிடம் இருந்து பணம் பெற்று 30 சதவீத கமிஷனுக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐ.பி.எல். போட்டி தொடங்கிய இரண்டாவது நாளே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VivoIPL #CricketBetting