ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் களங்காண மும்பை கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது தகுதி சுற்றில் மும்பை கொல்கத்தா அணிகள் இன்று (வெள்ளிக் கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன.

10ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சி உள்ளன. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்ட நிலையில், மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது தகுதி சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் கோதாவில் இறங்குகின்றன.

இரண்டு முறை சாம்பியனான மும்பை அணி முதலாவது தகுதி சுற்றில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது. இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இன்னொரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த மும்பை அணி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. புனேவுக்கு எதிரான ஆட்டத்தின் போது செய்த தவறுகளை திருத்திக்கொண்டு பரிகாரம் தேட முயற்சிப்பார்கள்.

நடப்பு தொடரில் லீக் சுற்றில் கொல்கத்தாவை சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் மும்பை அணியே (9 ஓட்டங்கள் மற்றும் 4 விக்கெட் வித்தியாசங்களில்) வெற்றி பெற்றிருந்தது. இதில் கொல்கத்தாவுக்கு எதிராக வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் 24 பந்துகளில் 60 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது ஹர்திக் பாண்ட்யாவின் (11 பந்தில் 29 ஓட்டங்கள்) மாயாஜால பேட்டிங்கால் மும்பை அணி ஒரு பந்து மீதம் வைத்து வாகை சூடியது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இத்தகைய வெற்றிகள் மும்பை அணிக்கு மனரீதியாக கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.

ஐ.பி.எல்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]