ஐ.நாவில் இந்தியா மௌனம் காத்ததால் தமிழகம் அதிருப்தியில்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தொடர்பான விவாதத்தில், இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்தமை தமிழகத்தை அதிருப்தியடையவைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்
ஐ.நா மனித உரிமைகள் பேரவை

அதிமுக, திமுக , நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி என தமிழகத்தின் முக்கிய கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் இம்முறை இலங்கைக்கு காலஅவகாசம் வழங்க கூடாது என்பதுடன், அவ்வாறு வழங்கப்பட்டால் இந்தியா அதற்கு கண்டனம் வெளியிட வேண்டும் என்று கடந்த ஒருமாதகாலமாகவே வலியுறுத்தி வந்தன. ஆனால், இந்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மௌனம் காத்து போல் இம்முறையும் மௌனமே காத்தது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது ஜெனிவாவில் நேற்று விவாதம் இடம்பெற்றது.

இதில், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, செக் குடியரசு, ஜேர்மனி, மொன்ரனிக்ரோ, டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அமெரிக்கா, எஸ்தோனியா, சூடான், மசிடோனியா, நோர்வே, அயர்லாந்து, ஸ்பெய்ன், பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, கானா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

எனினும், இந்தியா சார்பில் இலங்கையின் மனிதவுரிமைகள் விவகாரம் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. இந்தியப் பிரதிநிதி இந்த விவாதத்தில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குமாறும் கோரவில்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள் தொடர்பான இந்தியாவின் கருத்தை அறிந்து கொள்வதற்குப் பலரும் ஆர்வம்காட்டிய போதும், இந்தியா மௌனம் காத்தமை பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]