ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் நாளை வருகிறது ஆணையாளர் அறிக்கை

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் ஆணையாளர் செய்ட் அல் ராட் ஹுனைசின் இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை அவரால் மனிதவுரிமைகள் பேரவையில் முன்மொழியப்படவுள்ளது.

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில்

ஜெனாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களும் ஆணையாளர் இலங்கைத் தொடர்பில் இதனை வலியுறுத்தவுள்ளார் என்பதை எதிர்பார்த்துள்ளன.

முன்னதாக இலங்கைத் தொடர்பிலான எழுத்துமூல அறிக்கையை செய்ட் அல் ஹுசைன் வெளியிடவிருந்த தருணத்தில் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் ஆழமான கருத்தகள் இதுவும் மனிதவுரிமைகள் பேரவையில் முன்மொழியப்படவில்லை என்பதால் இலங்கை அரசுக்குச் சார்ப்பான ஒரு அறிக்கையையே ஆணையாளர் முன்வைப்பார் என்று பரவலாக பேசப்பட்டது.

ஆனால், அவரின் அறிக்கை எவரும் எதிர்பாராது போல் கடுமானதான அமைந்திருந்தது. குறிப்பாக இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் கவலையளிப்பவையாக உள்ளதாக வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவம், காணாமல் போனோர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டும் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை, உண்மை மற்றும் நல்லிணக்க இன்று வெளியாவுள்ள மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைத் தொடர்பில் மனிதவுரிமைகள் பேரவையின் இறுதி நிலைப்பாடு என்னவென்று உறுப்பு நாடுகளுக்கு தெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பமாகவும் அமையவுள்ளது.