ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்

ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான், தனது 80வது வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணமடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்த கோபி அன்னான், கானா நாட்டில் 8-4-1938 அன்று பிறந்தார். இவர் 1-1-1997 அன்று செயலாளர் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.

ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்கு உழைத்ததற்காக கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.

மேலும் பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா.அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]