ஐ.நா அமைதிப்படையில் இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை

ஐ.நா அமைதிப்படை

லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்டினன் கேணல் ஹேவகே என்ற இலங்கை இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது.

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த இராணுவத்தின் 150 பேர் கொண்ட அணிக்கு லெப்.கேணல் ரத்னபுலி வசந்தகுமார ஹேவகே என்ற அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் 2008 மற்றும் 2009 ஆம்ஆண்டு காலப்பகுதியில் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் என்றும், இவர் குறித்த மனித உரிமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கரிசனை எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இவரை லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐ.நா தடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]