ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் 4ஆம் திகதி வருகிறார்

ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் பதவி வகிக்கின்றார்.

உத்தியோகப்பூரவ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள அவர், 7ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் இளவரசர் சந்திக்கவுள்ளார்.

மேலும், எதிர்வரும் 6ஆம் திகதி கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவவரும் முகமாலைக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]