ஐ.தே.க.வின் 6ஆவது எம்.பியும் மகிந்த அணிக்குத் தாவினார் – அதிர்ச்சியில் கூட்டமைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 6ஆவது நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தவின் தரப்புக்குத் தாவினார். அந்தக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன, உள்நாட்டு அலுவல்கள், கலாசார அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மீளவும் தாவினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான எஸ்.பி.நாவின்ன, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்தார். எனினும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய அவர், நேற்றுவரை அந்தக் கட்சியின் சார்பில் செயற்பட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்பட பிரதமர் மகிந்த ஆதரவு தரப்புக்கு 104 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 99 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் குறைந்தனர். மக்கள் விடுதலை முன்னணியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]