‘ஐ.தே.க’வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலே

ஐ.தே.க யின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதனையடுத்து ஊடகங்களுக்கு இதனை நேற்று கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள ஜோசப் மைக்கல் பெரேரா தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களின் விருப்பத்தின்படியே கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.