ஐ.தே.க தலைமை பொறுப்பை பொருத்தமானவருக்கு வழங்கவும்

ஐ.தே.க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என, அக்கட்சியின் நலன்விரும்பிகள் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதற்கு அக்கட்சியால் முடியாத நிலை ஏற்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு பிரதமர் தனது தலைமை பொறுப்பை துறந்து பொருத்தமான ஒருவரை தலைவராக நியமிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]