ஐ.தே.க உறுப்பினர்கள் அறுவருக்கு பிரதியமைச்சு பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கு, பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆறு உறுப்பினர்களுக்கும் அடுத்த வாரம் இந்த பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரால் இவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரதி அமைச்சு பதவிகளுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, லக்கி ஜெயவர்தன, ரஞ்சித் அலுவிஹார, அஜித் மன்னப்பெரும, எட்வட் குணசேகர உள்ளிட மற்றுமொருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]