ஐ.தே.க உறுப்பினர்களுடன் ஆட்சியமைப்போம் – திஸாநாயக்க

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சுமார் பத்துப் பதினைந்து பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதியிலிருந்து வரும் இருவார காலத்துக்குள் கட்சியில் முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சியிலுள்ள முக்கிய பதவி வகிப்பவர்களை மாற்றிவிட்டு புதிதாக பொறுப்பாளர்களை நியமித்து கட்சியை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]