ஐ.தே.க அமைச்சர்களுடன் ஜனாதிபதி இன்று மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஐ.தே.க நாடாளுமன்றக் குழுவையும் தனித்தனியாகச் சந்தித்து நேற்று மாலை பேச்சு நடத்தினார்.

ஜனாதிபதி இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், ஐதேக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். நாளை விவாதிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டது.

எனினும், இந்தக் கூட்டங்கள் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் நிறைவு பெற்றதாகவும், இன்று காலை 9.30 மணியளவில் மீண்டும் ஐதேகவினரைச் சந்திக்க வருமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை ஆக்கபூர்வமான திட்டத்துடன் வருமாறு ஐதேகவினரிடம் ஜனாதிபதி கூறியுள்ளார். இன்று ஐதேக நாடாளுமன்றக் குழுவைச் சந்திக்கும் போது, தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.