ஐ.தே.கவின் பின்வரிமை எம்பிகள் கடும் அதிருப்தியில் : பிரச்சினையை தீர்க்க மங்கள மத்தியஸ்தம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிமை எம்.பிகள் தேசிய அரசுமீது கடும் அதிருப்தியடைந்துள்ளதாக ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாங்களில் இருந்து அறிய முடிகிறது.

தேசிய அரசு மீது இவர்களுக்கு எதனால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என அறிந்துகொள்ளும் முகமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று இரவு தனது இல்லத்தில் இவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நீண்டகாலத்திற்கு பின்னர் ஐ.தே.க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருபான்மை வாக்குபளத்தை பெற்றும் தனித்து ஆட்சியமைக்க முடியாது போனது. இதன் காரணமாக சு.கவுடன் இணைந்து அமைத்துக்கொண்ட தேசிய அரசில் சரிமமான அமைச்சுகளை சு.கவுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது.

தேசிய அரசு அமைக்கப்படும் போது இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இரண்டரை வருடங்கள் கடந்து அரசியல் ரீதியாக பாரிய மாற்றம் எதனையும் தேசிய அரசால் முன்னெடுக்கப்பட முடியாது போயுள்ளது. மேலும் எஞ்சியுள்ள இரண்டு, மூன்று வருடங்களிலும் நிலைமை இவ்வாறே செல்லும் என்று அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஐ.தே.கவின் பின்வரிமை

நீண்டகாலத்திற்கு பின்னர் அரசை அமைத்தும் தாம் தெரிவுசெய்யபட்ட தொகுதிகளுக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது உள்ளமை மற்றும் அரசில் தமதுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல காரணங்களால் இவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெடித்துள்ள பூகம்பம் போன்று ஐ.தே.கவிலும் அரசியல் பூகம்பம் வெடிக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]