ஐ.தே.கவின் படுகொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும் ; வலியுறுத்துகிறது எதிரணி

காணாமல் ஆக்கப்படுதலை குற்றவியல் சட்டமாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கடந்தகாலங்களில் இழைக்கப்பட்ட கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதிகமான படுகொலைகளைப் புரிந்தவர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு தங்களால் இழைக்கப்பட்ட படுகொலைகளை மறந்து விட்டது செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் காணாமல் போதலை குற்றவியல் குற்றமாக்கும் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற ஒன்றிணைந்த எதிர்கட்சி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின் அதனூடாக விசாரணை செய்யவேண்டிய விடயங்கள் சிலவற்றை இன்று பட்டியலிட்டது.

இதன்போது உரையாற்றிய பந்துல குணவர்தன அப்படியொரு விசாரணையை மேற்கொள்வதாயின் இலங்கையிர் அதிகமாக மனிதர்கள், நிராயுதபாணிகள் படுகொலை செய்யப்பட்டு, கொலையுண்ட சடலங்களை முழங்காலுக்குக் கீழே போட்டு வீதியில் சென்று புதையுங்கள் எனக்கூறியவர்கள் இந்த பூமியே தாங்கிக்கொள்ளாத அளவிலான கொடூரங்களை செய்திருக்கிறார்கள்.

இவை தொடர்பாகவும் விசாரணை அவசியம். தாய்,தந்தையை இழந்த பிள்ளைகள், அவர்களை இழந்த பெற்றோர்கள் எவ்வளவு துன்பகரமாக வாழ்க்கையை 80களின் தொடக்கத்திலிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்தவர்களே இன்று அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு வேறு படுகொலைகள் குறித்து பேசுகிறார்கள். மாறாக தங்களால் இழைக்கப்பட்ட படுகொலைகள் குறித்து பேசுவதில்லை.

அதனால் இறந்த காலத்திற்குச் சென்று விசாரணை செய்வதாயின் மகாநாயகர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அப்பாவி மக்களின் கழுத்தை அறுத்து வீதியில் வீசி வேலியடைந்தனர். இடம்பெற்ற கொடூரக் கொலை வரலாற்றை மறந்துவிட்டுதான் இதுகுறித்து விசாரணை நடத்தப்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும் இறந்தகால சம்பவங்கள் குறித்தும் விசாரணை அவசியமாகும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]