ஐ.தே.கவின் காலத்திலேயே மலையக மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது

இலங்கை 1947ஆம் ஆண்டு சுதந்திர பெற்றிருந்த போதும் மலையகம் 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில்தான் சுதந்திரம் பெற்றது. அதற்கு முன் எம் மக்களிடம் வாக்குரிமை இருக்கவில்லை. எவரும் அரச துறையில் பணியாற்றவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருடகால தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டை கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் மலையகத்தில் பலருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருக்கும் போது தான் சீடா நிறுவனம் மலையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அத்தோடு ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியும் ஐக்கிய தேசியக் கட்சி காலத்தின் தான் கொண்டுவரப்பட்டன. இன்று கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் ஆகிய கலாச்சார அமைச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் இன, மத, மொழி பேதங்கள் இல்லாமல் சுதந்திரமாக பயமின்றி நாம் வாழ்கின்றோம் என்றால் அது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் மாத்திரமே. எனவே, மலையக மக்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை பிரிக்க முடியாத அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]