ஐ.தே.கட்சியின் 5 முக்கிய பதவிகளில் திடீர் மாற்றம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து முக்கிய பதவிகளில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செயற்குழு கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கட்சியின் தலைவர், துணைத்தலைவர், உப தலைவர், தவிசாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளில் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பதவிகளுக்கு நியமனத்தை மேற்கொள்ள 12 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக்க, அகிலவிராஜ் காரியவசம், மங்கள சமரவீர, நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்ணான்டோ, அஜித் பெரேரா, எரன் விக்ரமரத்ன, ருவன் விஜேவர்தன, நளின் பண்டார, சஜித் பிரேமதாஸ ஆகிய அமைச்சர்களுடன் நானும் உள்ளடங்குகின்றேன்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை கூட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]