ஐ.ஏ.ஆர்.ஏ விருது வழங்கும் விழாவில் சிறந்த சர்வதேச விருதை வென்ற விஜய்

2018-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.ஆர்.ஏ விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய்க்கு சிறந்த சர்வதேச நடிகர் விருது கிடைத்துள்ளது.

நடிகர் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘மெர்சல்’.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வெளியான இடங்களிலெல்லாம் வசூல் சாதனை புரிந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பிஜேபிக்கு எதிரான சில வசனங்கள் காரணமாக படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்தன. ஆனால் அதுவே படத்துக்கு சிறந்த விளம்பரமாக அமைந்தது.

இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான IARA (International Achievement recogniton awards) லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்று (செப்டம்பர் 22) நடைபெறுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.

இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் பெஸ்ட் இன்டர்நேஷனல் ஆக்டர் விஜய்(#BestInternationalActorVijay) என்ற ஹேஸ்ட்டேக்கை பகிர்ந்து வருகின்றனர். இது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்தப் பட்டியலில் ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ் ஜான் போயிகா, ‘கெட் அவுட்’ திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ் (ஹொலியோக்ஸ்) கிரிஸ் அட்டோ (ஸ்விங்ஸ்) மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்களும் பெற்றிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]