ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டுகள் சிறை

ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றம் தொடர்பான வழக்கு ஹவாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்ட நிலையில், அமெரிக்க விமானப்படை அதிகாரி குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்க விமான படையின் வான்வழி போக்கு வரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்த இகாய்கா எரிக் காங்(35) ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்த போது அங்கு பணிபுரிந்தார்.

இதன்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்து வந்த இவர், தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இவருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இருந்த தொடர்பை அமெரிக்காவின் ‘எப்.பி.ஐ.’ உளவு நிறுவனம் கண்டுபிடித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டில் ஒகுவில் உள்ள ஸ்கோ பீல்டு ராணுவ அலுவலகத்தில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டனார்.

அவர் மீது ஹவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]