ஐஸ்வர்யா ராயை பற்றிய உண்மையை போட்டுடைத்த அபிஷேக் பச்சான்!!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து 11 ஆண்டுகள் கழித்து, பச்சன் தான் எதற்காக ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தேன் என்பதை தெரிவித்துள்ளார்.

மனைவி ஐஸ்வர்யா பற்றி அபிஷேக் பச்சன் கூறியதாவது, அழகு ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்பதால் அவரை திருமணம் செய்யவில்லை. அழகை அடிப்படையாக கொண்டது அல்ல எங்களின் உறவு.

அவர் ஒரு பிரபலமான நடிகை என்பதாலும் திருமணம் செய்யவில்லை. குணம் மேக்கப் இல்லாத ஐஸ்வர்யா ராயை பிடிக்கும். ஐஸ்வர்யாவின் நல்ல குணத்திற்காக அவரை திருமணம் செய்தேன்.

பொது இடங்களில், என் மனைவியை பார்த்து மக்கள் விசில் அடிப்பது எனக்கு பழகிவிட்டது. அது மக்கள் என் மனைவி மீது வைத்து இருக்கும் அன்பை காட்டுகிறது. விளம்பரங்களை தவிர நான் அவரை கவர ஒருநாளும் விசில் அடித்தது இல்லை.

எங்களுக்கு திருமணம் ஆன புதிதில், புதுப்பெண் கணவருக்கு ஏதாவது சமைத்துக் கொடுக்க வேண்டும். ஐஸ்வர்யா எனக்கு அல்வா செய்து கொடுத்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அல்வா அருமையாக இருந்தது என்றார் அபிஷேக் பச்சன்.

இதுவரை நாங்கள் என் பெற்றோரின் பங்களாவான ஜல்சாவில் இருப்பது தான் எனக்கும் ராய்க்கும் நிம்மதி என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். இதுவரை தனிக்குடித்தனம் செல்லும் எண்ணம் வந்ததுமில்லை இனிமேல் செல்லபோவதுமில்லை.

கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை என்று அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் அதை அவர்கள் கண்டுகொள்வதும் இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]