ஐஸ்வர்யா என் அம்மா

ஆந்திராவை சேர்ந்தவர் சங்கீத் ராய் குமார். இவர்தான் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னை பெற்ற தாய் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தச் சர்ச்சை குறித்து செய்தியாளர்களை மங்களூருவில் சந்தித்த சங்கீத் “நடிகை ஐஸ்வர்யா ராய் செயற்கை கருத்தரிப்பு மூலம் லண்டனில் 1988ம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார்.

ஆகவே அவர்தான் என்னுடைய தாய். அவர் உலக அழகியாக பட்டம் வெல்வதற்கு ஆறு ஆண்டுகள் முன்பே தனக்கு தாய் ஆகிவிட்டார். நான் 3 வயது முதல் 27 வயது வரை சோடவரத்தில் இருந்தேன். ஒரு வயது முதல் இரண்டு வயது வரை நான் மும்பையில் உள்ள என் பாட்டி பிருந்தா ராய் குடும்பத்துடன் இருந்தேன். என் தாத்தா கிருஷ்ணராஜ் ராய் கடந்த ஏப்ரல் மாதம் தான் மறைந்தார். எனது தாய் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சானுக்கும் கடந்த 2007 ஆண்டு திருமணம் நடந்தது. ஆனாலும் என் அம்மா தற்போது தனியாகவே வசித்து வருகிறார். அவர் மங்களூருக்கு வந்து என்னோடு வாழ வேண்டும்.

கடந்த 27 ஆண்டுகளாக பிரிந்து தவிக்கும் நான் இனியும் அம்மாவை பிரிந்து வாழ விரும்பவில்லை. அவரை ரொம்பவே இழந்து தவிக்கிறேன். எனது அம்மா செல்போன் நம்பரையாவது யாராவது கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இவரிடம் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய தாய்தான் என்று நிரூபிக்ககூடிய எந்த ஆதரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]