முகப்பு Kisu Kisu - UT Gossip ஐஸ்வர்யாவால் ஏமாற்றப்பட்ட சென்ராயன்

ஐஸ்வர்யாவால் ஏமாற்றப்பட்ட சென்ராயன்

ஐஸ்வர்யாவால் ஏமாற்றப்பட்ட சென்ராயன்

நேற்றையதினம் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒரு வித்யாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க் என்னவென்றால் போட்டியாளர்கள் அனைவருக்கும் தொலைபேசி அழைப்பு வரும் அதை எடுக்கும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார்கள். அப்போட்டியாளர் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் அந்த அழைப்பில் யாரை குறிப்பிடுகிறார்களோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்யவைப்பதே.

முதலாவதாக வந்த தொலைபேசி அழைப்பினை ஐஸ்வர்யா எடுக்கிறார். அவ் அழைப்பில் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் சென்ராயானின் தலை முடிக்கு சிகப்பு நிறத்தில் டை அடிப்பதற்கு அவரை ஓகே சொல்லவைக்கவேண்டும். அவ்வாறு ஐஸ்வர்யா செய்தால் அடுத்த வாரம் ஐஸ்வர்யா எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

ஆனால் ஐஸ்வர்யாவோ, சென்ராயனிடம் அப்படியே மாற்றி, நீங்கள் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உங்கள் முடியை நீங்கள் சிகப்பு நிறத்தில் டை அடித்துகொள்ளவும் என்று கூறினார்.

சென்ராயனும் எந்த கேள்வியும் கேட்காமல் தனது முடியை கலர் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஐஸ்வர்யாவிற்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் சென்ராயன் டாஸ்க் செய்தால் நீங்கள் தான் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவீராகள், அவரல்ல நீங்கள் பொய் சொல்ல கூடாது என்று கூறியதும், அதற்கு ஐஸ்வர்யா இல்ல இது என்னோட திட்டம் நான் அவரிடம் பின்னர் கூறிவிடுகிறேன் என்று கூறுகிறார்.

சென்ராயனின் வெகுளி தனத்தை பயன்படுத்தி ஐஸ்வர்யா இப்படி பொய் கூறியது ரசிகர்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சென்ராயன் பல முறை தனது முடி தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருக்கிறார். ஒரு வேலை ஐஸ்வர்யா, சென்ராயனிடம் உண்மையை கூறியிருந்தால் சென்ராயன் கண்டிப்பாக ஐஸ்வர்யாவிற்காக தனது தலை முடியை கலர் செய்திருக்க மாட்டார் என்பது தான் பலரின் எண்ணமும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com