ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம்

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழுவொன்று இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தெற்காசியப் பிரிவுக்கான புதிய உதவித் தலைவர் அன்ட்ரூ மக் டோவல் தலைமையிலான உயர்மட்டக் குழுவே மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின்

இந்தக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், வர்த்தக பிரமுகர்கள், இராஜதந்திர சமூகத்தினர், உள்நாட்டு, வெளிநாட்டு நிதி நிறுவனங்களைச் சந்தித்து அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால முதலீடுகள் குறித்து பேச்சுகள் நடத்தவுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் நிதி உதவியின் கீழ் தரமுயர்த்தப்பட்டுவரும் கழிவுநீர் உட்கட்டமைப்பு நிர்மாணப் பணிகளை உதவித் தலைவர் மக் டோவல் பார்வையிடவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளும் நேரடியாக உரிமை கொண்டுள்ள ஐரோப்பிய முதலீட்டு வங்கி, ஐரோப்பாவில் உள்ள நீண்டகால கடன் வழங்கும் நிறுவனம்.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உதவித் தலைவர் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதுடன்இ 2002 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஸ்ரீலங்காவில் முதலீடுவதற்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]