ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம்

ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய வர்த்தக மண்டலம் நேற்று கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்வாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

ஆடை உற்பத்தியை மட்டும் மட்டுப்படுத்தி பயணித்த கைத்தொழில் உற்பத்தில் இன்று பல்வேறு உற்பத்திகளை நோக்கி விரிவடைந்துள்ளது. கண்டிமுதல் அப்பாதோட்டை வரை கைத்தொழில் வலயத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சிலர் இரண்டு வருடங்களில் செய்தது என்னவென்று கேட்கின்றனர். 500 மில்லியன் மக்களை உள்ளடக்கிய உலகின் பணக்கார சந்தையில் பிரவேசிப்பதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டதே பாரிய வெற்றியாகும். அதன் மூலம் உலகில் பாரிய சந்தை வாய்ப்கை கைப்பற்றிக்கொள்ள முடியும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]