ஐரோப்பாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் குறித்து விசேட கவனம்

ஐரோப்பாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரும் காணி அமைச்சருமான  ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகைதந்துள்ளனர். நடப்பாண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tourists from Europe visit to Sri Lanka
ஐரோப்பா கண்டத்திலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக கொழும்பில் சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பா கண்டம் குறித்து விடேசமாக கவனம் செலுத்துவதற்காக சுற்றுலாத்துறை ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.