‘ஐப்ரோ’ அழகிக்கு செல்போன் பயன்படுத்த பெற்றோர் தடைவிதித்துள்ளனர்!

யங் சென்சேஷன் ‘ஐப்ரோ’ அழகி பிரியா வாரியர் செல்போன் பயன்படுத்த அவரது பெற்றோர் தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களை தன் புருவ அசைவுகளால் தெறிக்கவிட்ட மலையாள நடிகை பிரியா வாரியர். இவர் பற்றிய உண்மை தகவலை அவரது தந்தை பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பிரியா வாரியர் வீட்டில் செல்போன் பயன்படுத்த தடை போடப்பட்டுள்ளதாம். பிரியா இதுவரை அவரின் தாயின் செல்போனை தான் பயன்படுத்தி வருகிறாராம். வீட்டில் மொபைல் ஹாட்ஸ்பாட் போட்டால் மட்டுமே ப்ரியா அவரின் செல்போனை பயன்படுத்துவாராம்.

’மாணிக்க மலராய பூவி’ பாடலில் ஐப்ரோவை அசைத்து காதல் அம்புவிட்டு ஒரே நைட்டில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் ‘சிம்பா’ படத்தில் பாலிவுட்டில் இருந்து நடிக்க வாய்ப்புகள் வருவதாக செய்திகள் வெளியாகின.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]