ஐந்தே மாதத்தில் 1161 பேரை காவு கொண்ட விபத்து

இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 31ஆம் திகதி வரை 1104 வாகன விபத்துக்களால் 1161 பேர் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

பலியானவர்களுள் 349 பேர் பாதசாரிகள் என்றும்,  98 பேர் சாரதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த விபத்துக்களால் 163 பயணிகள் பலியாகியுள்ளதாகவூம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விபத்துக்களினால் 441 மோட்டார் சைக்கிள் சாரதிகள் பலியாகியுள்ளதுடன், இதில் 23 பேர் தலைக்கவசம் அணியாதவர்கள் என்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மேல்மாகாணத்திலேயே அதிகமான வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவூம், அதிகளவு வாகனம் மற்றும் கட்டுபடுத்த முடியாத வேகமே குறித்த விபத்துக்களுக்கு காரணமாக உள்ளதாக இந்த சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]