ஐந்து வான் கதவுகள் திறப்பு

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டுதால், குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதியில் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]