ஐந்து அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு 21 இல்

ஐந்து அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்தச் சிறப்பு அமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வடக்கு மாகாண சபையின் மூன்றரை வருடகால செயற்பாடுகளை ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர், “எதிர்வரும் 21ஆம் திகதி விசேட அமர்வு கூட்டப்படும். அந்த அமர்வு தேவையைப் பொறுத்து 2 அல்லது 3 நாட்கள் நடைபெறலாம்” எனத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]