ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மற்றும் இங்கிலாந்திற்கு இடையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.

இதற்கிடையில் ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் கடந்த போட்டியில் இடம் பெறாத சகலதுறை வீரரான கிறிஸ் வோக்ஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் ஒலி போப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஜேம்ஸ் வின்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜே ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலைஸ்டைர் குக், சேம் குர்ரான், கீடன் ஜென்னிங்ஸ், ஒலி போப், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இத்தொடருக்கான 13பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி விபரம் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தற்போது வரை நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதில் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நொட்டிங்காம், ட்ரென்ட் பிரிஜ்ட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இந்தியா அணி 203 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கமைய இத்தொடரில், இங்கிலாந்து அணி 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]