ஐந்தாவது இந்திய – இலங்கை பாதுகாப்புக் கலந்துரையாடல்

ஐந்தாவது இந்திய – சிறிலங்கா இலங்கை பாதுகாப்புக் கலந்துரையாடல் புதுடெல்லியில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 9ஆம் திகதி நடந்த இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு இலங்கை தரப்புக் குழுவுக்கு, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்கினார்.

இந்தக் குழுவில், இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் கிரிஹகம, விமானப்படைத் தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் டயஸ், சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல் பியால் டி சில்வா, கடலோரக் காவல்படை பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, மற்றும் மேஜர் ஜெனரல் ஜிஎல்ஜே வாதுகே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா தலைமையில் பாதுகாப்பு. மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் உயரதிகாரிகள், மூத்த இராணுவ, கடற்படை, விமானப்படை, கடலோரக்காவல் படை உயர் அதிகாரிகள் 10 பேர் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தனர்.