ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி- ஜனாதிபதியின் அதிரடி முடிவு

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய ஜனாதிபதி இணக்கம் பகிரங்கமாக இணக்கம் தெரிவித்துள்ளார்.நேற்று முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உரையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பற்றி கருத்து தெரிவித்த போது இதனை இரத்துச்செய்வது பற்றிய தீர்மானத்திற்கு தானும் உடன்படுவதாக தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான முக்கியமானதொரு தடை தாண்டல் அல்ல என்றும் இதன்போது பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் பற்றி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]