முகப்பு News Local News ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (15) ஆரம்பமாகின்றன.

அந்தவகையில், 35 மத்திய நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

மதிப்பீட்டுப் பணிகளில் 8,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடவை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com