ஐநா கோரிக்கை நிராகரிப்பு – ‘முன்னாள் போராளி’யை இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை

ஐ.நாவின் கோரிக்கைகயை நிராகரித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் , விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பவுள்ளது.

2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் 22ஆம் திகதி திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தது.

அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஐ.நா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்து, கொழும்புக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது

கடும் பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். இதுதொடர்பான அறிவித்தல் தடுப்பு முகாமில் உள்ள சாந்தரூபனுக்கு அவுஸ்திரேலியா எல்லை பாதுகாப்புப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]