ஐநாவில் நாட்டில் நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து வெளியிடவுள்ள ஜனாதிபதி

ஐநாவில் நாட்டில் நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து வெளியிடவுள்ள ஜனாதிபதி

இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில், யுத்தத்தின் பின்னர் நிலவுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு யோசனைகளை கொண்ட அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25 ஆம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்த ஜனாதிபதி இது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையருடன் விவாதிப்பதாய் தெரிவித்தார். யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், இராணுவத்தினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஐ.நா. சபையில் அறிக்கை ஒன்றை அளிப்பதாய் கூறினார்.

தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டை அவர் மறுத்துள்ளார். உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கை, நீதிமன்ற அனுமதியில்லாமல் பொறுத்தமற்றது என்றார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதாயின் முதலில் குற்றப்பத்திரிகை மற்றும் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும். இவையில்லாமல் இராணுவ உயர் அதிகாரிகளை கைது செய்ய முடியாது என்றார்.

தற்போது தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடாத்தப்போவதாக தெரிவித்தார். தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்ற செய்திகள் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் இவ்விடயம் குறித்து பொலிஸ் மா அதிபரிடமும் விபரங்களை கேட்டுள்ளேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]