ஐதராபாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆதரவாளர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் அழுத்தமாக காலூன்றி உள்ளனர். அவர்கள் தங்கள் அமைப்பிற்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஆட்களை திரட்டி வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு ஆசைவார்த்தை கூறி, ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வருகின்றனர். ஒன்றிரண்டு இளைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக வாலிபர் ஒருவர் செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, புலனாய்வு குழுவினர் ஐதராபாத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கோனகல்லா சுப்ரமணியன் என்கிற ஒமர் (22) என்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரது அறையில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களுடன் பேசியது பதிவாகி இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

பொலிஸார் விசாரணையில், 2014-ல் அவர் முஸ்லிம் மதத்தில் விரும்பி சேர்ந்ததும், மத சடங்குகளில் முறையான பயிற்சி பெறுவதற்காக குஜராத் சென்றதும், ஸ்ரீநகர், தமிழகம், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் சென்று வந்ததும், மும்பையில் உள்ள அபு காபா அல்-ஹிந்தி என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்துஇ நாட்டை அச்சுறுத்தும் நடவடிக்கையில் செயல்பட்ட ஒமர் மீது வழக்குப்பதிவு செய்த ஐதராபாத் நகர பொலிஸார் அவரை கைது செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]