ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலிக்கு முதலிடம்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 200 ஓட்டங்கள் அடித்ததன் மூலம், டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம்பிடித்தார்.

கடைசி டெஸ்ட் போட்டியில் 40 ஓட்டங்கள் மட்டுமே அடித்ததால், 2-வது இடத்திற்கு தள்ளப்பட்ட கோலி, 3-வது டெஸ்டில் 200 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டதன் மூலம் மீண்டும் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் 937 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இன்னும் ஒரு புள்ளி பெற்றால் 938 புள்ளிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக புள்ளிகள் பெற்றவர்கள் பட்டியலில் 10-வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக புள்ளிகள் பெற்றவர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் 961 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஹட்டன், ரிக்கி பாண்டிங், ஹோப்ஸ்  942 புள்ளிகளும், மே 941 புள்ளிகளும், ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், வாலூட், சங்ககரா 938 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

 

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]