ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க ஜெனிவா செல்கிறது இலங்கை குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு அடுத்துவரும் திங்கட்கிழமை ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் இந்தக் குழு அங்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றது.

அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் தலைவர் மனோ தித்தவெல, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் நரேன் புள்ளே, பிரதமரின் ஆலோசகர் பிரசாந்தி மகிந்தரத்ன, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மஹிஷினி கொலன்னே ஆகியோர் அடங்கிய குழு அங்கு செல்லவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]